அதிர்ச்சி.. பிரபல காமெடி நடிகை, தொகுப்பாளினி திடீர் மரணம்!

 
சுபி சுரேஷ்

சமீப காலங்களாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் மரணமடைந்து வருகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 16 பேர் திரையுலகினர் மரணமடைந்துள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் நடிகர் தாரக் ராணா காலமானது தெலுங்கு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மரணம் தமிழ் திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், அந்த கவலை ரேகை மறைவதற்குள் பிரபல மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நகைச்சுவை நடிகையுமான சுபி சுரேஷ் மரணமடைந்துள்ளது கேரள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுபி சுரேஷ்

நடிகை சுபி சுரேஷ், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு, கொச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.  

சுபி சுரேஷ்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மலையாள ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை சுபி சுரேஷூக்கு பெரிய திரையிலும் வரவேற்பு கிடைத்தது. நகைச்சுவை கலந்து இவர்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தனித்துவத்துக்காக ரசிகர்கள் பெரியளவில் நடிகை சுபியைக் கொண்டாடினார்கள். சின்னத்திரையில் இவருக்கு கிடைத்த வரவேற்பையும், புகழ் வெளிச்சத்தையும் அடுத்து, படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?