அதிர்ச்சி... வேலூர் சி.எம்.சி மருத்துவர் அறையில் சோதனை சிக்கிய கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள்!

 
வேலூர் சி.எம்.சி சிஎம்சி மருத்துவமனை

வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு சொந்தமான மருத்துவர் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் அறையில், இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெல் கிங் (29) என்பவர், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவசர சிகிச்சை பிரிவில் இளநிலை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் தோட்டப்பாளையத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சொந்தமான விடுதியில் தங்கியுள்ளார்.

வேலூர் சிஎம்சி

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சென்னையைச் சேர்ந்த 7 அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் இன்று மாலை வரை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

மருத்துவர் பெல் கிங் அங்கு இல்லாததால், கதவை உடைத்துச் சோதனை செய்ததில் சுமார் 33 கிராம் கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டன.

வேலூர் சிஎம்சி

தற்போது பெல் கிங்கின் செல்போன் அணைக்கப்பட்டுள்ளதால், அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது கூட்டாளிகள் சிலர் வெளி மாநிலத்தில் வைத்து அமலாக்கத்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!