அதிர்ச்சி.. தங்கம் விலை மீண்டும் உயர்வு! கதறும் நகை ப்ரியர்கள்!

 
தங்கம்

இன்றைய மத்திய பட்ஜெட்டில் என்ன அதிர்ச்சி காத்திருக்குமோ என்று எதிர்பார்த்தவர்களுக்கு, பட்ஜெட்டுக்கு  முன்பாகவே தங்கம் விலை அதிர்ச்சியை தந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.22 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை ரூ.5,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனால், தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பங்கு சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட வீழ்ச்சியால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணீக்கை அதிகரித்து வருவதே இந்த தொடர் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.  பொதுவாக தை மாதத்தில் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு இந்த வருடம் அதிர்ச்சி தான் காத்திருந்தது. தங்கத்தின் விலை, தை மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து அதிகரித்து வருவதும், குறையும் போது சொற்ப அளவிலான விலை இறக்கத்திலேயே இருந்து வருகிறது. பங்கு சந்தை வீழ்ச்சியும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Gold & Silver

இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன தான் விலை ஏற்றம் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. காரணம் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாக பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையாமல் இருக்கிறது.

Gold

இன்னும் சில நாட்களில், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும், ஆனாலும், பெரிய அளவில் திடீர் சரிவு எல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web