நள்ளிரவில் அதிர்ச்சி... அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி பலி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அரசு பேருந்தும் காரும் மோதி கொண்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பலியாகினர். சோமாசி பாடி அருகே காட்டுக்குளம் பகுதியில் நள்ளிரவு 2:30 மணிக்கு இந்த விபத்து நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த பாண்டிச்சேரி - பெங்களூரு நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது. , இன்று அதிகாலை 2.30 மணியளவில் கீழ்பெண்ணாத்தூர் அருகே சோ.காட்டுக்குளம் பகுதியில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காருக்குள்ளே இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்னர், அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த நபர்களின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது பாண்டிச்சேரியைச் சேர்ந்த சைலேஷ் (38), சதீஷ்குமார் (52), ஸ்டாலின் (44), சரோப் (47) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் லாரி உரிமையாளர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து தனது நண்பர்களுடன் சொந்தபணி காரணமாக பெங்களூரு சென்று, வேலையை முடித்து விட்டு மீண்டும் இன்று அதிகாலை திருவண்ணாமலை வழியாக பாண்டிச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் அதனால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!