அதிர வைக்கும் தகவல்கள்... ஒன்றரை மாதத்தில் 83 பழங்குடியின மாணவர்கள் மரணம்... அரசுப்பள்ளி விடுதிகளில் நீடிக்கும் மர்மங்கள்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அலிதாபாத் மாவட்டம், லச்சோடா மண்டலத்தில், பழங்குடியின பெண்கள் படித்து வரும் விடுதியுடன் கூடிய அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதனிடையே, இங்கு சர்ச்சைக்குரிய மர்ம மரணங்களும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
உரிய பராமரிப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மர்ம மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மாணவி மரணம் அடைந்தார். அவரது மரணம் மர்மமாகவே இருக்கும் நிலையில், இவ்வாறான குருகுல பள்ளிகளில் கடந்த 15 மாதங்களில் மட்டும் 83 மாணாக்கர்கள் மர்மமான வகையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் உயிரிழந்த 83 மாணவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த வகையான மரணத்தில் உள்ள மர்மம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!