அதிர வைக்கும் தகவல்கள்... 1500 திருமணங்கள் மூலம் சிறுமிகள் விற்பனை படுஜோர்!

 
அதிர வைக்கும் தகவல்கள்... 1500 திருமணங்கள் மூலம் சிறுமிகள் விற்பனை படுஜோர்! 

ராஜஸ்தான் மாநிலம் சுஜன்புரா கிராமத்தில் செயல்பட்டு வருகிறது காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளை . இந்த அறக்கட்டளை சார்பில் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். பின்னர் இளம்பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்த 16 வயது சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காயத்ரி, அனுமான், பகவான் தாஸ், மகேந்திரா 4 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

திருமணம் கல்யாணம் கும்பம்

போலீசார் நடத்திய விசாரணையில் பீகார், மேற்குவங்கம், ஒடிசா, உத்தர பிரதேசத்தில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மா விலைக்கு வாங்கி விடுவார்.

அதன் பிறகு காயத்ரி அந்த பெண்களை 2 முதல் 5 லட்ச ரூபாய் பணத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இளம்பெண்களின் நிறம் உயரம் வயதிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5வது திருமணம்

சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளையும் தயாரித்து வைத்தனர். இந்த வகையில் இதுவரை காயத்ரி 1500 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web