அதிர்ச்சி... கர்நாடக டிஜிபி-யின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு!

 
கர்நாடகா டிஜிபி

கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் (Civil Rights Enforcement Directorate) டிஜிபியாகப் பணியாற்றி வரும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

டிஜிபி ராமச்சந்திர ராவ் தனது அலுவலகத்தில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் ரகசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இவை அவர் பெலகாவியில் பணியாற்றிய போது எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த ராமச்சந்திர ராவ், "இந்த வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெலகாவி மண்டல ஐஜியாக இருந்த போது எடுக்கப்பட்டவை. அந்தப் பழைய வீடியோக்களை இப்போது யாரோ வெளியிட்டுள்ளனர்" என்று கூறி, வீடியோவில் இருப்பது தான் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

சில நிமிடங்களிலேயே தனது கருத்தை மாற்றிக் கொண்ட அவர், "இந்த வீடியோக்கள் உண்மையானவை அல்ல; இவை போலியானவை. என்னைச் சிக்க வைக்க யாரோ சதி செய்துள்ளனர். இது குறித்து எனது வழக்கறிஞருடன் ஆலோசிப்பேன்" என பல்டி அடித்தார்.

ராமச்சந்திர ராவ், கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையான ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்னும் 4 மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தச் சர்ச்சை அவரது பதவிக்குச் சிக்கலை உருவாக்கியுள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அரசு அலுவலகத்தில் இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்கள் நடந்தது குறித்துத் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!