அதிர்ச்சி... மேகேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்த 30 பேர் கொண்ட நிபுணர் குழு - கர்நாடக அரசு உத்தரவு!

 
மேகேதாட்டு அணை

காவிரி ஆற்றின் குறுக்கே 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய மேகேதாட்டு அணையை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில், 30 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து கர்நாடக அரசு நேற்று (டிசம்பர் 12) உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இத்திட்டத்தை விரைவுபடுத்த கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது.

கர்நாடகா போலீசார் முழு அடைப்பு

திட்டத்தின் தற்போதைய நிலை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கான திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்தது. இந்தத் திட்டத்திற்குத் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

அடங்காத கர்நாடகம்: மேகேதாட்டு பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்! – டாக்டர் ராமதாஸ்

நிபுணர் குழு நியமனம்:

இதைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு இறங்கியது. ஏற்கனவே நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.

இந்நிலையில், தற்போது மேகேதாட்டு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் நோக்கில், 30 நிபுணர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு காவிரியில் பாசனக் கழக இயக்குநரின் கீழ் செயல்படும் என்றும், இதன் அலுவலகம் பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகராவில் பிரத்யேகமாக நிறுவப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்தச் செயல், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!