அதிர்ச்சி... 5 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை.. போலீசார் விசாரணை!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், 5 வயது மகனைக் கொன்றுவிட்டுத் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் அம்பலக்காவு பகுதியில் வசித்து வந்த நிதி நிறுவன ஊழியர் மோகித்தின் குடும்பத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், தற்போது போலீசாரின் தீவிர விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

மோகித்துக்குக் காய்ச்சல் இருந்ததால் அவர் ஒரு அறையிலும், அவரது மனைவி ஷில்பா (30) மற்றும் மகன் அக்சயஜித் (5) மற்றொரு அறையிலும் உறங்கச் சென்றுள்ளனர். மற்றொரு அறையில் மோகித்தின் தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் காலை வெகுநேரமாகியும் ஷில்பாவின் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மோகித், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ஷில்பா தூக்கில் தொங்குவதையும், மகன் கட்டிலில் அசைவற்று கிடப்பதையும் கண்டு கதறியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பெரமங்கலம் போலீசார் கதவை உடைத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஷில்பா தனது மகனை முதலில் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. குடும்பத்தில் பெரிய அளவில் சண்டைகளோ அல்லது நிதிப் பிரச்சனைகளோ இருந்ததாகத் தெரியவில்லை. ஷில்பா மன அழுத்தத்தில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் ரகசியக் காரணம் உள்ளதா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் அக்சயஜித் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது விஷம் கொடுக்கப்பட்டதா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும்.

சமீபகாலமாகக் கேரளா மற்றும் தமிழகத்தில் இது போன்ற குடும்பத் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து மனநல நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். "திடீர் மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 (தமிழகம்) அல்லது 1056 (கேரளா) ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்" என அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
