அதிர்ச்சி... காதலனுடன் சென்ற மகளின் காலில் விழுந்து கதறிய தாய்!
பெற்றோர்கள் பார்த்த வரனை மறுத்து, தனது காதலனைத் திருமணம் செய்துகொண்ட மகளைத் தன்னுடன் வருமாறு கூறி, தாய் ஒருவர் காவல் நிலையத்திலேயே மகளின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி. இவர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குளச்சல் தும்பக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றபோது, நில அளவையாளராகப் பணியாற்றி வரும் அபினாஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு நிஷாந்தியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நிஷாந்திக்கு வேறு ஒரு இளைஞருடன் ஜனவரி 12-ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதில் விருப்பமில்லாத நிஷாந்தி, நேற்று வீட்டை விட்டு வெளியேறி அபினாஷைத் திருமணம் செய்துகொண்டு, அந்தப் புகைப்படத்தைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது மகள் கடத்தப்பட்டதாகக் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் நிஷாந்தி தாமாகவே காதலனுடன் சென்றது உறுதியானது. இருவரும் காவல் நிலையத்தில் ஆஜரானபோது, அங்கு வந்த நிஷாந்தியின் தாய் எதிர்பாராத விதமாக மகளின் காலில் விழுந்து, "எங்களுடன் வந்துவிடு" என்று கதறி அழுதார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த பாசப் போராட்டத்தில், நிஷாந்தி தனது காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். இறுதியில், நிஷாந்தி மேஜர் என்பதால், போலீசார் அவரை அபினாஷுடன் அனுப்பி வைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
