அதிர்ச்சி... வீட்டு வேலை செய்யச் சொன்னதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொந்தை கிராமத்தில் வீட்டில் வேலை செய்ய சொன்னதால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் விக்கிரவாண்டி, கீழக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சுபஸ்ரீ (17). இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் சுபஸ்ரீ வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டில் இருந்த சுபஸ்ரீயிடம், அவரது தாய் சாந்தி துணிகளைத் துவைக்குமாறும், சமையல் வேலைகளில் உதவுமாறும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் தாய்-மகள் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாய் வேலை செய்யச் சொன்னதால் மனமுடைந்த சுபஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த தாயார் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டு வேலை செய்யச் சொல்லி தாய் கண்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி இந்த விபரீத முடிவை எடுத்தது உறுதியானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வுச் சுமை மற்றும் எதிர்காலக் கனவுகளுக்கு இடையே இருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு, விடுமுறை நாட்களில் மன அழுத்தத்தைக் குறைக்கக் குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தமிழக அரசு செயல்படுத்தி வரும் '14417' போன்ற ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
