பகீர்!! இந்தியாவில் கொடூரம்!! ஒவ்வொரு நாளும் 5,500 குழந்தைகள் புகை பழக்கத்துக்கு அடிமை !!

 
புகைப்பிடித்தல்

அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரியும், பிரபல தொற்றுநோயியல் நிபுணருமான நரேஷ் புரோகித் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் 2ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கு 26 கோடியே 80 லட்சம்பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள்.

இளைஞர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் பீடி, ஹூக்காவுக்கு பதிலாக சிகரெட்டுக்கு மாறிவிட்டார்கள். மேல்தட்டு மக்கள், சிகரெட்டுக்கு பதிலாக சிகாருக்கு மாறிவிட்டார்கள். ஆனால், சிகாரில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.

புகைப்பிடித்தல்

இந்தியாவில், தினமும் 5 ஆயிரத்து 500 குழந்தைகள், புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு பேர், புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பிறர் புகைக்கும்போது, பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதே தீங்கு ஏற்படும். உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகை பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், பாதிப்புகளை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

நரேஷ் புரோகித்

தொடர்ந்து பேசிய அவர், புகை பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. அதேநேரம் பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீத மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன. புகையிலையில் இருந்து உருவாகும் புகையில் புற்றுநோயை உருவாக்கும் 80 காரணிகள் இருக்கின்றன.பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன. புகை பழக்கத்தை விட முடியாதவர்கள், மனநல ஆலோசகரை அணுகினால் பலன் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web