அதிர்ச்சி.. அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல் !!

 
அரசு அலுவலகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், யோஜனா பவன் என்ற அரசு அலுவலகம் கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அலுவலகம் உள்ளது. 

இங்கு பணம் மற்றும் தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் அதிகாரி தலைமையில் போலீசார் சென்று சோதனையிட்டனர். இதில் கட்டுக்கட்டாக ரூ.2.31 கோடி பணமும், 1 கிலோ தங்கக் கட்டிகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

அரசு அலுவலகம்

அரசு அலுவலகத்தில் பெரியளவில் தங்கம், பணம் பதுக்கிவைக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அரசு அலுவலகத்திற்குள் பணம் மற்றும் தங்கக் கட்டிகளை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

குறிப்பாக லஞ்சமாக பெறப்பட்ட பணமா? அல்லது சட்டவிரோத செயலுக்கு பதுக்கிவைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர். முதலில், அலுவலக ஊழியர்தான் நகை, பணத்தை பார்த்து பிறகு போலீசாருக்கு ரகசியதாக தகவல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.  

அரசு அலுவலகம்

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.31 கோடி பணம் 2 ஆயிரம் ரூபாய், ரூ. 500 நோட்டுகளாக இருந்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற உள்ளோம் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ள நிலையில் அதேநாளில் ரூ. 2.31 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web