கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு … 10 பேர் பலி, பலர் படுகாயம்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபர்கள் இருவர் பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சந்தேக நபர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பெண் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொரு நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
