அதிர்ச்சி... மாமூல் தர மறுத்ததால் இளம்பெண்ணை இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்!
மாமூல் தர மறுத்ததால் மசாஜ் செண்டரில் இருந்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று ரவுடி கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் கேரளத்தை அதிர செய்துள்ளது. ரவுடி கும்பலைச் சேர்ந்த 2 பேரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் ஆயுர்வேத மசாஜ் மையம் நடத்தி வந்த கடை உரிமையாளரிடம் அப்பகுதியைச் சேர்ந்த தாதா கும்பல் ஒன்று, கடந்த பிப்ரவரி 1ம் தேதி ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டது. ஆனால் மசாஜ் செண்டர் நடத்தி வந்த பெண், ரூ.10 ஆயிரம் மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் மசாஜ் மையத்தில் நுழைந்து ஊழியர் மற்றும் பெண் வாடிக்கையாளரை தாக்கியது.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு அறையில் இருந்த பெண் ஊழியரை தனியறைக்கு இழுத்துச் சென்ற கும்பலில் இருந்த 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சுபின் அலெக்சாண்டர் சார்கோ (29), பெர்லின் தாஸ் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுபின் அலெக்சாண்டர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
