அதிர்ச்சி... கீரிப்பிள்ளை கடித்த சிறுவன்... மருத்துவமனையில் கீரிப்பிள்ளைப் போன்றே அறிகுறிகள் காட்டி உயிரிழப்பு!

 
கீரிப்பிள்ளை

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நவீன், கீரிப்பிள்ளை கடித்ததன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, சிறுவன் நவீன் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கீரிப்பிள்ளை ஒன்று அவனைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. கீரிப்பிள்ளை கடித்த சமயத்தில் முறையான மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல், அருகில் உள்ள ஒரு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி வந்து கொடுத்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுவனுக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதோடு, சிறுவன் கீரிப்பிள்ளை போலவே சத்தம் எழுப்புவது மற்றும் விசித்திரமான செய்கைகளைச் செய்யத் தொடங்கியுள்ளான்.

கீரிப்பிள்ளை

உடனடியாகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருத்துவர்களின் மெத்தனமே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

பொதுவாக நாய், பூனை, குரங்கு போன்றவற்றைக் காட்டிலும், கீரிப்பிள்ளை போன்ற காட்டு விலங்குகள் கடிக்கும்போது ரேபிஸ் வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. ரேபிஸ் நோய் உச்சக்கட்டத்தை எட்டும் போது, பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கடிக்கப்பட்ட விலங்கின் குரலிலோ அல்லது விசித்திரமான உடல் அசைவுகளிலோ ஈடுபடுவது அந்த நோயின் தீவிரமான ஒரு அறிகுறியாகும். 

காட்டு விலங்குகள் கடித்தால், காயம் சிறியதாக இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று 'ரேபிஸ் தடுப்பூசி' போட்டுக் கொள்வது அவசியம். மருந்தகங்களில் கிடைக்கும் சாதாரண மாத்திரைகள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தாது என்பதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!