அதிர்ச்சி... பென்சில் தொண்டையில் குத்தி கிழித்ததில் யுகேஜி சிறுவன் உயிரிழப்பு!!
பள்ளி இடைவேளையின் போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்த யுகேஜி மாணவன், தான் கையில் வைத்திருந்த பென்சில் தொண்டையைத் துளைத்ததில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் குசுமஞ்சி மண்டலத்தில் உள்ள நாயக்கங்குடேம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் விஹார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி (UKG) பயின்று வந்தான்.
நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, சிறுவன் விஹார் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வகுப்பறையை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாகச் சிறுவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான். சிறுவன் கீழே விழுந்தபோது, அவன் கையில் வைத்திருந்த பென்சில் அவனது தொண்டைப் பகுதியில் மிகப்பலமாகத் துளைத்தது. இதனால் அவனுக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட பள்ளி ஊழியர்கள், உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மிகவும் சிறிய வயதில் பென்சில் குத்தியதன் காரணமாகச் சிறுவன் உயிரிழந்த செய்தி நாயக்கங்குடேம் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
பெற்றோர்களே உஷாராக இருங்க. குழந்தைகள் கையில் பென்சில், பேனா அல்லது கூர்மையான பொருட்களை வைத்துக்கொண்டு ஓடுவதைத் தவிர்க்க அறிவுறுத்துங்க. வகுப்பறைகளில் பொருட்களைக் கையாளும் விதம் குறித்து ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
