அதிர்ச்சி வீடியோ!! சுற்றுலாப் பயணிகளை துரத்திய காண்டாமிருகம்!!

 
ஜீப்

சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் தினசரி பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் வனவிலங்குகளின் வீடியோ தான் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது. அந்த வகையில் காட்டிற்கு சுற்றுலா சென்றபோது, காண்டாமிருகங்கள் சண்டை போடுவதை சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென  2 காண்டாமிருகங்கள் அவரை துரத்த தொடங்கின. இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானதுடன் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது  ஜல்தபாரா தேசிய பூங்கா. இங்கு சுற்றுலா சென்ற  7 பேர்  காட்டுக்குள் சபாரி சென்றனர். இவர்கள் சபாரி சென்ற வாகனம் மீது 2 காண்டாமிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

காண்டாமிருகம்

அந்த 7 சுற்றுலா பயணிகளும் அந்த பூங்காவில், புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை பார்த்தே ஆக வேண்டும் என ஆர்வத்துடன் இருந்தனர். அதனால் சபாரி செய்ய முடிவு செய்தனர். இதனால் தொடர்ந்து புதர்களின் விலங்குகளின் நடமாட்டத்தை கவனித்து வந்தனர்.  அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த மாதிரி  ஒரு புதரில் 2  காண்டாமிருகங்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்டிருந்தன.உடனடியாக சுற்றுலாப் பயணிகள் விரைவாக தங்கள் கேமராவில் அந்த தருணத்தைப் படம்பிடித்தனர். ஆனால், இது அவர்களுக்கே ஆபத்தாக மாறும் என்பதை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும்  புகைப்படம் எடுப்பதிலும், வீடியோ எடுப்பதிலும் மும்முரமாக இருந்தனர். இதனால் காண்டாமிருகங்களின் கவனம் ஜீப்பின் பக்கம் திரும்பியதையும்  கவனிக்கவில்லை.  அதே நேரத்தில்  இரண்டு காண்டாமிருகங்களும் அந்த சஃபாரி ஜீப்பை நோக்கிச் சென்றன. அருகில் வந்ததும் சுதாரித்த ஜீப் ஓட்டுநர்  என்ஜினை ஸ்டார்ட் செய்து தப்பிக்க முயன்றார். அவசரத்தில் ஜீப் ஓட்டியதால் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி சாலையை ஒட்டியுள்ள குறுகியப் பள்ளத்தில் விழுந்து விட்டது. இந்த விபத்தில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர்  படுகாயமடைந்த  சுற்றுலா பயணிகளை மீட்டு , மேற்கு வங்கத்தின் மதரிஹாட் சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக  உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பூங்கா வரலாற்றில்  இதுவரை சுற்றுலா வாகனங்களை நோக்கி, காண்டாமிருகங்கள் மோதியதாக புகார்கள் வந்ததே இல்லை. இதனால் அதிகாரிகளும் பெரும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பூங்காவில் புதிய எச்சரிக்கை பலகைகளையும் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பலகைகளில் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  பூங்காவில் நீண்ட வருடங்களாக பணியில் இருந்து வரும் ஓட்டுநரும் இது போல் ஒரு அனுபவத்தை தன் வாழ்நாளில் கண்டதில்லை எனத் தெரிவித்துள்ளார். யாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படாதது அதிர்ஷ்டமே எனவும் தெரிவித்துள்ளார்.  சுற்றுலாப் பயணிகள் 7 பேரும் நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவே இல்லை . 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web