அதிர்ச்சி வீடியோ!! ஆம்புலன்சில் இருந்த பெண்ணை ஊரே சேர்ந்து அடித்த கொடூரம்!! கணவன், மகன் முன் பரிதாபம்!!

 
ambulance

இன்று மார்ச் 7ம் தேதி மாசி பௌர்ணமி. மாசி பௌர்ணமியில் தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ ஆலயங்களிலும் கடலாட்டு விழா தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி மகத் திருவிழா நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்ததும் மீண்டும் ஊர்வலமாக ஊருக்கு திரும்பி இருக்கிறது. அப்போது சாத்தப்பாடி ,  மேலமணக்குடி மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 


இதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர் என 6 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில்  இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், தங்கள் ஊரை சேர்ந்தவர்களை தாக்கியவர்ளை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்  காயமடைந்து ஆம்புலன்சில் சென்றவர்களை சிலர் தாக்கியுள்ளனர்.

ambulance

ஆம்புலன்சில் பெண் உட்பட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.  முகத்தில் துணி கட்டிய நபர் ஒருவர் வேகமாக ஆம்புலன்சில் ஏறி சரமாரியாக பெண் உட்பட அனைவரையும் தாக்கினர். கணவர், மகன் முன்னிலையில் ஊரில் பலரும் ஆம்புலன்சில் இருந்த அந்த பெண்ணை தாக்கியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் ஊரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆம்புலன்சில் இருந்த பெண்ணை மோசமாக தாக்கியவர்களை காவல்துறையினர்  கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web