அதிர்ச்சி வீடியோ!! 4 யானைகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!!

 
யானை

வனப்பகுதிகளை அழித்து குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து விட்டன. இதனால் வனப்பகுதியில் வாழும் யானை, குரங்கு, புலி, சிறுத்தை ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்கு வர ஆரம்பித்து விட்டன. நாம் அதன் இடத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம். அவை நம்மை தொந்தரவு செய்யவில்லை. மனிதர்கள் தான் அதன் இடத்தில் சட்டமாக அமர்ந்து கொண்டு அதன் வாழ்வாதாரத்தை பறித்து வருகிறான். ஆனால் மின்வேலி போட்டு அதை வரவிடாமல் செய்யும் கொடூரங்களும் நடந்தேறி வருகின்றன.


சமீபத்தில் ஆந்திராவில் யானைக்கூட்டம் ஒன்று  விளைநிலங்களுக்குள் புகுந்து மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் உணவு, குடி தண்ணீருக்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 
 நேற்று இரவு ஆறு யானைகள் கொண்ட கும்பல் ஒன்று பார்வதிபுரம் அருகே உள்ள விளைநிலத்தில் புகுந்தது.

யானை

அப்போது அங்கு மிகவும் தாழ்வாக இருக்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மின் கம்பி மீது யானைகள் உரசி சென்றபோது மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து  கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர்  மற்றும் வனத்துறையினர்  விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  டிரான்ஸ்பார்மருக்கு எல்லை சுவர் போட்டு பாதுகாக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web