அதிர்ச்சி வீடியோ!! மளமளவென சரிந்து விழுந்த 4 மாடிக் கட்டிடம்!!

 
கட்டிடவிபத்து

சென்னை பாரிமுனை கார்னரில் அரண்மனை அர்மேனியன் தெருவில்  பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே பகுதியில் பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  இந்தக் கட்டிடம் இன்று  மளமளவென  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில்  பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்டிடத்தை புனரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.  



இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியார் ரவிச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்  4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கட்டிட விபத்து

அதில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் பொதுமக்கள் கட்டிடத்திற்கு அருகே செல்லாமல் இருக்கவும் வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தையே ர்உலுக்கியது சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து எனலாம். பிரம்மாண்டமான 11 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web