அதிர்ச்சி வீடியோ!! கிரிக்கெட் கேப்டனை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர்!!

 
கேப்டன்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி  வீரசோழன் பகுதியில் வசித்து வருபவர்  சிவா. தற்போது மதுரை தெப்பக்குளம், மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் இவருக்கு பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.ஆனால் இவருக்கு கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் . தனது நண்பர்களுடன்  புறக்கணிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தி வந்தார்.  சிவாவை அவரது நண்பர்கள் ‘சச்சின்’ சிவா என அழைக்கத் தொடங்க இன்று அதுவே அவரது அடையாளமாக உள்ளது.  பள்ளி, கல்லூரியிலும் கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்த ‘சச்சின்’ சிவா தமிழக அணியில் இடம் பிடித்தார்.


அதன் பின்னர், தமிழக அணியில் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். பின்னர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி, தற்போது இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சச்சின் சிவா இன்று ஏப்ரல் 18 சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார். அப்போது அரசுக்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய SETC பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்து நடத்துனர் இதில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறிவிட்டார். 


சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்தில் பயணிக்க அனுமதி உள்ளது . அதற்கு, நடத்துநர் சிவாவிடம் 'முகத்தை உடைத்து விடுவேன். எனக்கு எல்லாம் தெரியும். நீ எங்கே வேண்டுமானாலும் சென்று சொல்லு. வீடியோவிற்கு நான் பயப்படமாட்டேன்' என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.  ‘நீ மதுரைக்கு வா. பார்த்துக்கொள்ளலாம்’ என கூறி மிரட்டல் விடுத்துச் சென்றார் . இதனையடுத்து சச்சின் சிவா மற்றொரு பேருந்தில் பயணித்தார். இதை சச்சின் சிவா வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிரிக்கெட்

இது குறித்து வீடியோவில் சச்சின் சிவா "ஒரு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் மற்ற மாற்றுத்திறனாளிகள் பார்வையற்றோருக்கு என்ன மாதிரியான நிலை அரசு பேருந்தில் ஏற்படும். அரசு ஊழியர்கள் இது போன்று இருப்பது சரியா?” என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா ஏற்றமறுத்த நடத்துனர் ராஜாவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜாவிடம் நாளை நேரில் விசாரணை செய்யப்படும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web