அதிர்ச்சி வீடியோ... விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் பலி... இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது சோகம்!

 
அதிர்ச்சி வீடியோ... விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் பலி... இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது சோகம்! 

 

டொமினிகன் குடியரசு நாட்டின் தலைநகர் சாண்டோ டொமிங்கோ. இங்கு அமைந்துள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விடுதியில் Rubby Pérez’s என்பவரது இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. 

 

இந்நிகழ்வு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாடுவதையும், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதையும் காணொளியில் படம்பிடித்து கொண்டிருந்தனர். கூரை திடீரென இடிந்து விழுந்ததால் கொண்டாட்டமே சோகமாக மாறியது.

இடிபாடுகள் ஏற்பட்டபோது அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் அங்கு இருந்தனர். இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல் போய் இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

பாடகர் Rubby உட்பட மொத்தம் 121 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையின் போது, ​​160 பேர் வெளியேற்றப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குப் பிறகும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web