அதிர்ச்சி வீடியோ... கல்யாண வீட்டில் சிலிண்டர் வெடித்து புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் உயிரிழப்பு!
கல்யாண வீட்டில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில், புதுமண ஜோடி உட்பட 8 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த இந்த சிலிண்டர் வெடிப்பு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் ஜி-7/2 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
#Pakistan: A newly married couple were killed when a gas cylinder exploded at a house in #Islamabad where they were sleeping after their wedding party, police have said.
— Gulistan News (@GulistanNewsTV) January 11, 2026
A further six people - including wedding guests and family members - who were staying there also died in the… pic.twitter.com/VcigoL9wao

வெடிப்பில் வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 19 பேரை மீட்புப் படையினர் மீட்டனர். இதில் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணையில் எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 4 வீடுகள் சேதமடைந்தன. உயிரிழப்புக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமண மகிழ்ச்சி, நொடியில் சோகமாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!