அதிர்ச்சி வீடியோ... பாலைவனத்தின் நடுவே சிக்கிக் கொண்ட குடும்பம் !

 
பாலைவனம்

கடும் பாலைவனப் பகுதியான சவூதி அரேபியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது  அல்தவாத்மி பகுதி. இந்த பகுதியை தாண்டி ஒரு பாலைவனப் பயணத்தில்  கடந்த வாரம் 24 மணி நேரத்திற்கு மேலாக மணல் பள்ளத்தாக்குகளில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ச்சியான  அனுபவம் நேர்ந்துள்ளது.  உணவு, தண்ணீர், மற்றும் தொலைபேசி சிக்னல் எதுவும் இல்லாத நிலையில், அந்தக் குடும்பம் வண்டியின் ரேடியேட்டரில் இருந்த தண்ணீரை குடித்து உயிரை பிடித்து வைத்தனர்.  

அதே போல் பசிக்காக பாலைவன செடிகளின் இலைகளைக் கூட சாப்பிட்டனர். ஏப்ரல் 7 ம் தேதி இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் “KSA Expats” பக்கத்தில் பதிவிடப்பட்டது. இச்சம்பவம்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ஹல்பான் பாலைவனப் பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த குடும்பத்தை மீட்பதற்காக சவூதி  “என்ஜாத்” தன்னார்வலர் குழு ஒரு பெரிய தேடல் நடவடிக்கையை தொடங்கியது.  

இந்த குழுவினர் ட்ரோன்களை பயன்படுத்தி மேல்நோக்கி தேடி, தரையில் வாகனங்களிலும் சென்றும் குழுமங்களை அமைத்து தேடினர். அதிக வெப்பம், நிழல் இல்லாத சூழ்நிலை போன்ற தீவிர சூழ்நிலைகளில், அவர்கள் வெயிலால் ஏற்பட்ட தாகம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கினர். அதனையடுத்து  குழுவினர் நேரத்துடன் போட்டிபோட்டு நடவடிக்கை எடுத்தனர். சிலர் நீரிழிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மீட்கப்பட்ட பிறகு உடனடியாக உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகள் அனைத்துமே  வழங்கப்பட்டன.

கார் பாலைவனம் சுற்றுலா

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி, எஞ்சாத் குழுவின் வீரத்துக்கும், தன்னார்வ செயற்பாட்டுக்கும் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும், எதிர்பாராத பயணங்களுக்கு முன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்பதையும் இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது.பல இணைய பயனர்கள், “பாலைவனப் பயணத்திற்கு போகும்போது அதிக தண்ணீர், உணவு, சிக்னல் கொடுக்கும் வசதிகள் போன்றவை அவசியம்” என முக்கியமான அறிவுறுத்தல்களையும் பதிவிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web