அதிர்ச்சி வீடியோ... சாலையை கடந்த போது வேகமாக வந்த பைக்… தூக்கி எரியப்பட்ட கொடூரம்!

 
அதிர்ச்சி வீடியோ... சாலையை கடந்த போது வேகமாக வந்த பைக்… தூக்கி எரியப்பட்ட கொடூரம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கன்னோஜ் பகுதியில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சித்த போது இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி உத்திரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மார்ச் 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயற்சித்துள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கீழே விழுந்த நிலையில் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து முதியவருக்கு உதவியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?