அதிர்ச்சி வீடியோ... நடுவானில் விமானத்தில் சிகரெட்.. தட்டி கேட்டதால் கோபத்தில் இருக்கைக்கு தீ வைத்த இளம்பெண்!

விமான பயணங்கள் சமீபகாலமாக பெரும் சவாலாக இருந்து வருகிறது. இஸ்தான்புல் பகுதியில் இருந்து சைப்ரஸ் செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் சிகரெட் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விமானத்தில் நீல நிற புர்கா மற்றும் கண்ணாடி அணிந்து ஒரு பெண் ஏறினார்.
Passenger on a flight from Istanbul to Cyprus tried to light the plane on fire pic.twitter.com/homvqIg4Qg
— TaraBull (@TaraBull808) March 21, 2025
இவர் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு திடீரென சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனை அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் தட்டிக் கேட்டனர். ஆனாலும் அவர் அதனை மறைக்கும் முயற்சித்தாரே தவிர நிறுத்தவில்லை எனத் தெரிகிறது. விமான ஊழியர்கள் அந்த பெண்ணின் கையில் இருந்த சிகரெட் லைட்டரை பிடுங்கிய போது அவர் இருக்கையை தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார்.
விமான ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் இச்சம்பவம் 2019ம் ஆண்டில் நடந்ததாகவும், அப்போதே அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!