அதிர்ச்சி வீடியோ... தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டை தூக்கி சென்ற கழுகு... பதறி துடித்த மாணவர்!

 
அதிர்ச்சி வீடியோ... தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டை தூக்கி சென்ற கழுகு... பதறி துடித்த மாணவர்! 

கேரள மாநிலம் காசர்கோட்டில் செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று. இந்த பள்ளியில் மாநில பொது சேவை ஆணையம் நடத்தும் துறை ரீதியான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 

இந்நிலையில் தேர்வுக்கு வந்த மாணவர் ஒருவர் ஹால் டிக்கெட்டை அருகில் வைத்துவிட்டு அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கழுகு அங்கு வந்தது. ஹால் டிக்கெட்டை அலகால் கொத்தி எடுத்துச் சென்று ஜன்னல் மீது அமர்ந்து விட்டது. 

இதனை பார்த்து அந்த மாணவர் அதிர்ச்சியடைந்தார். கழுகின் மேல் கல் எரிந்து விரட்டினால் கழுகு ஹால் டிக்கெட்டை எடுத்து பறந்து சென்று விடும். இதனால் அனைவரும் செய்வது அறியாமல் திகைத்து விட்டனர். 

அதிர்ச்சி வீடியோ... தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டை தூக்கி சென்ற கழுகு... பதறி துடித்த மாணவர்! 

சிறிது நேரம் கழித்து கழுகு ஹால் டிக்கெட்டை கீழே போட்டு விட்டு சென்றது. உடனே மாணவரும் ஹால் டிக்கெட்டை எடுத்து சென்று விட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web