அதிர்ச்சி வீடியோ... பிரசாதம் வாங்குங்க... கோவிவில் பக்தர்களை சராமாரியாக தாக்கிய ஊழியர்கள்…!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சந்த்ரிகா தேவி கோவில். இந்த கோவிலில் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருவிழா நாளில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், குறிப்பாக அலிகஞ்ச் பகுதியில் வசித்து வரும் பியூஷ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர், கோவிலில் பிரசாதம் வாங்கும்போது கடைக்காரர்களால் வற்புறுத்தப்பட்டனர். பிரசாதம் வாங்க மறுத்த பியூஷ் மீது, கடைக்காரர்கள் ஆத்திரம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
UP की राजधानी लखनऊ के बीकेटी चंद्रिका देवी मंदिर पर दर्शन करने आए श्रद्धालुओं को प्रसाद न खरीदने पर दुकानदारों ने जमकर पीटा। वीडियो वायरल होने के बाद पुलिस ने 4 आरोपियों को हिरासत मे लिया है। #viralvideo pic.twitter.com/MPQkojM2Sz
— TRUE STORY (@TrueStoryUP) April 7, 2025
இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சில கடைக்காரர்கள் கையிலுள்ள பெல்ட்கள் மற்றும் கைகலப்பில் ஈடுபடுவது, பெண்கள் தள்ளாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த தாக்குதலில் பியூஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்ததால் பாதிக்கப்பட்டவர் பியூஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பிகேடி காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது கோவிலில் தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடம் கடைக்காரர்கள் இந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!