அதிர்ச்சி வீடியோ... மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலைக்குட்டி!

 
முதலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் விரித்த வலையில் மீனுக்குப் பதிலாகச் சுமார் 5 அடி நீளம் கொண்ட முதலைக்குட்டி ஒன்று சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே. ஆடுர் கிராமத்தில் உள்ள குளத்தில் மீனவர்கள் சிலர் மீன்பிடிப்பதற்காக வலை விரித்திருந்தனர். அவர்கள் வலையை இழுத்துப் பார்த்தபோது, அதில் மீனுக்குப் பதிலாகச் சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட ஒரு முதலைக்குட்டி சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மீனவர்கள் அந்த முதலைக் குட்டியை வலையுடன் சேர்த்து லாவகமாகக் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர், இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த முதலைக் குட்டியை வனத்துறையினரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்று பள்ளி மாணவன் பலி !

மேலும் அந்தக் குளத்தில் ஒரு ராட்சத முதலை இருப்பதாகவும், அதனைப் பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!