பதற வைக்கும் வீடியோ... மகள் காதல் திருமணம்... தந்தை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... காதலனின் தந்தை வெளுத்த உறவினர்கள்!

 
பதற வைக்கும் வீடியோ... மகள் காதல் திருமணம்... தந்தை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... காதலனின் தந்தை வெளுத்த உறவினர்கள்! 

நாகா சந்திரவத்னி பகுதியில் வசித்து வருபவர் ரிஷிராஜ் ஜெய்ஸ்வால். இவர் வீட்டில் தனியாக இருந்த போது, தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது மகள் ஹர்ஷிதா, 15 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஆனந்த் பிரஜாபதியை திருமணம் செய்துகொண்டார்.  புகாரின் பேரில் போலீசார் அவளைக் கண்டு பிடித்து மீட்ட பிறகும் நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் கணவனுடன் வாழ அனுமதிக்கப்பட்டது.

இதனால் ரிஷிராஜ் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். மேலும் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதால் கோபத்தில் இளம் பெண்ணின் உறவினர்கள் அவர் திருமணம் செய்து கொண்ட ஆணின் தந்தையை வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு அடித்து தாக்குதல் நடத்தினர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web