அதிர்ச்சி வீடியோ... திமுக அவைத்தலைவரை ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ!
திருவள்ளூர் மாவட்டத்தில், கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கும்மிடிப்பூண்டி திமுக எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கட்சி நிர்வாகி ஒருவரைப் பலமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய திமுக அவைத்தலைவர் முனிவேல். அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைக்காமல், முன்னாள் மாவட்டச் செயலாளரான கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வை மட்டும் வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முனிவேல் ஒன்றியச் செயலாளரிடம் முறையிட்டுள்ளார்.
திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேலின் கன்னத்தில் ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ கோவிந்தராஜன்!
— R.PALANINATHAN (@palaninathan_r) January 5, 2026
'கொள்கை பிடிப்புள்ள கட்சி', 'அரசியல்படுத்தப்பட்ட இயக்கம்' என மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் உண்மை முகம் இதுவே. தலைமை முதல் கிளை வரை, அனைத்து மட்டத்திலும் திமிரும், அடக்குமுறையும், சாதிய வன்மமும் pic.twitter.com/i9unmuduTK

ராள்ளப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற 'திராவிட பொங்கல்' விழாவின் ஒரு பகுதியாகக் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டப் பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, தன் மீது புகார் அளித்த அவைத்தலைவர் முனிவேலை கண்ட எம்.எல்.ஏ ஆவேசமடைந்துள்ளார்.
எல்லோர் முன்னிலையிலும் முனிவேலின் கன்னத்தில் எம்.எல்.ஏ பலமாக அறைந்து தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. டி.ஜெ.கோவிந்தராஜன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி மேலிடம் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே நிர்வாகியைத் தாக்கியது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!