அதிர்ச்சி வீடியோ... வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பான்மசாலா கொடுத்து, கெட்ட வார்த்தைச் சொல்லித் தரும் இளைஞர்கள்!

 
போதை

மகாராஷ்டிரா மாநிலத்தில் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகள் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள். இங்கு ஆண்டு முழுவதும்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலா செல்வதற்காக வருகை தந்திருந்தார்.  

அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில இளைஞர்களை சந்தித்து உரையாடினார்.  அவருக்கு அவதூறு வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதனைத் தொடர்ந்து அவர் புதிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முருட்- ஜன்ஜிரா கோட்டையில் அங்கிருந்த உள்ளூர் இளைஞரிடம் வரலாற்று விவரங்களை கேட்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த இளைஞர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா, குட்கா போன்றவற்றை வெளியே எடுத்துக் காட்டியுள்ளார்.  
அதனை யன்படுத்த சுற்றுலா பயணி ஆர்வம் காட்டியதும், அந்த இளைஞர் அவற்றைப் பற்றி விளக்கி கூறியதுடன், அதனை பயன்படுத்த கூறினார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில்  வைரலான நிலையில் இதை பார்த்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புகையிலை குட்கா

பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது தடை செய்யப்பட்ட பொருள்கள் வழங்கியதற்கும், அநாகரிகமாக நடந்து கொண்டதற்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  சுற்றுலா பயணிகளிடம் இவ்வாறு நடந்து கொள்வது நாட்டின் மதிப்பை பாதிக்கலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web