வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... பர்த்டே பார்ட்டியில் விபரீதம் …. ஸ்னோ ஸ்ப்ரேயால் தீப்பிடித்து எரிந்த பெண்!

இன்றைய காலகட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில வைரலாகும், சில நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Second before disaster (@NeverteIImeodd) June 12, 2025
அந்த வீடியோவில் பெண் ஒருவர் சோபாவில் அமர்ந்திருக்கிறார். மற்றொரு பெண் கையில் கேக் வைத்திருக்கிறார். அதை அவர் அங்குள்ள மேசையில் வைக்க முயற்சிக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் அவர்கள் இருவரின் மீதும் ஸ்னோ ஸ்ப்ரேயை அடிக்கிறார்கள். இதனால் அவர்கள் தலை முழுவதும் பணி படர்ந்தது போல மாறிவிடுகிறது.
இந்நிலையில் சிறிது நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. இதில் அவர்கள் இருவர் மீதும் தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியது. இதனால் அவர்கள் இருவரும் அலறி துடிக்கின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!