வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் பயங்கர சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்!

 
வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் பயங்கர  சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை டாஹிசர் மேற்கில் உள்ள கண்பத் படில் நகர் பகுதியில் ஒரு  மாலை வேளையில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3  பேர் உயிரிழந்ததோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறிய சச்சரவுகள் காரணமாக மனவெறுப்பில் இருந்த ஷேக் மற்றும் குப்தா குடும்பங்கள்  நேற்று மாலை சுமார் 5 மணிக்கு  ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர். 

இந்த மோதலில் ஹமீத் ஷேக், ராம் குப்தா மற்றும் அரவிந்த் குப்தா ஆகிய 3 பேர்  உயிரிழந்துள்ளனர்.இந்த மோதலில் 3பேர் படுகாயம் அடைந்து  சடாப்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள்  படுகாயம் அடைந்தவர்களின் உடல்நிலை தற்போது  முன்னேறி இருப்பதாகவும்  தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் கண்பத் படில் நகர் பகுதியில் பெரும் பதற்றமும் துயரமும் நிலவி வருகிறது.மேலும் இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது