வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ரீல்ஸ் மோகத்தால் பரிதாபம்... வாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட இளம் பெண்!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் லைக்குகள் ஷேர்களுக்காக முட்டாள் தனமாக பல பணிகளை செய்துவிடுகின்றனர். சில நேரங்களில் ஆபத்துக்களிலும் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இளம்பெண் ஒருவர் வாஷிங்மெஷினுக்குள் எப்படியோ நுழைந்துவிட்டார்.
Yurtdışında çamaşır makinesine girip mahsur kalan kadını olay yerine gelen itfaiye ekipleri kurtardı.pic.twitter.com/w4H2S4Vmgt
— BTG (@btgsondakika) June 10, 2025
அவர் எதற்காக வாஷிங்மெஷினில் நுழைந்தார் என காரணம் தெரிய வராத நிலையில் அவரால் பின்னர் வெளியே வரவே முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்க முயற்சி செய்தனர்.
அந்தப் பெண்ணை பல கட்டங்களாக முயற்சி செய்து அவர்கள் மீட்க முயற்சி செய்த நிலையில் இறுதியில் அந்த பெண்ணை முழுவதுமாக வாஷிங் மெஷினில் கீழே தள்ளி அவரது காலில் ஒரு துணியை கட்டி பின்னர் மெதுவாக வெளியே இழுத்து விட்டனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக வலைதளப் புகழுக்காக இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது குறித்து நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!