வைரலாகும் அதிர்ச்சி வீடியோ… காட்டுக்குள் இருந்து வெளியே வந்த யானை... அலறி அடித்து ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள்!

 
காட்டுக்குள் இருந்து வெளியே வந்த யானை


 


அஸ்ஸாம், அருணாச்சல எல்லைப்பகுதியில் அமைந்துள்ள  சுற்றுலா பகுதிக்கு  ஒரு குடும்பம்  சுற்றுலா சென்றிருந்தது. அவர்கள் காட்டில் இருந்து  திடீரென அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டுக்குள் இருந்து  ஒரு காட்டு யானை வெளியே வந்து பயணிகள் இருக்கும் இடத்தில் நுழைந்து விட்டதால்  சுற்றுலாப் பயணிகள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடத் தொடங்கினர். 

யானையைப் பார்த்ததும்  அருகிலிருந்த வாகனங்களும் தங்களது பாதையை மாற்றி நகர்ந்தன. இச்சம்பவத்தின் வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி பரவீன் கஸ்வான் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.   “அழகான இடங்களை தேடி, தயவுசெய்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்ற எச்சரிக்கையுடன் அவர் பதிவிட்ட அந்த வீடியோ தற்போது 60,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.


அந்த வீடியோவில், மக்கள் கூட்டம், யானையின் ஓட்டம், பீதியுடன் ஓடும் பயணிகள் ஆகியவை தெளிவாக தெரிகின்றன. மகிழ்ச்சி தரவேண்டிய சுற்றுலா பயணம் பரபரப்பாக முடிந்தது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “யானைகள் வழக்கமாக நடமாடும் இடத்தில் சுற்றுலா நடத்துவது சரியா?”, “இது யானையின் குடியிருப்பு… மனிதர்கள் வரக்கூடாத இடம்”, “இது போன்ற இடங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது” என நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  

காட்டுக்குள் இருந்து வெளியே வந்த யானை
வனத்துறை  ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம், இயற்கையை அனுபவிக்க போவது நியாயமானதுதான், ஆனால் விலங்குகளின் வாழ்விடத்துக்குள் நுழைவது எப்போதும் ஆபத்தே என்பதையும் நினைவுபடுத்துகிறது என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது