பதைபதைக்கும் வீடியோ... திடீரென தானாக நகர்ந்த லாரியைத் தடுக்க முயன்றவர் உடல் நசுங்கிப் பலி!

 
லாரி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஒரு கோர விபத்து நிகழ்ந்தது.

தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (65) என்பவர் அந்தத் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை குடோனுக்கு வந்திருந்த லாரிகளில் இருந்து அட்டைப்பெட்டிகளை இறக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரியின் ஓட்டுநர், அதன் என்ஜினை அணைக்காமலேயே வாகனத்தை விட்டு கீழே இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த லாரி திடீரென முன்னோக்கித் தானாக நகரத் தொடங்கியது.

லாரி நகர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் மற்றும் சபிர் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள், வாகனத்தை நிறுத்த அதன் முன்பகுதிக்குச் சென்று கைகளால் தள்ளினர். மற்ற இரு தொழிலாளர்களும் பக்கவாட்டில் இருந்ததால் லாரி நகரும் வேகத்தைக் கண்டு உடனே விலகிக் கொண்டனர். ஆனால், சிவலிங்கம் லாரியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி லாரியின் முன்பக்கத்தைத் தள்ளிக்கொண்டே பின்னோக்கிச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக, பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரிக்கும் நகர்ந்து வந்த லாரிக்கும் இடையில் சிவலிங்கம் சிக்கிக் கொண்டார். இரண்டு லாரிகளுக்கு இடையே உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இந்த விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். லாரி என்ஜினை அணைக்காமல் அஜாக்கிரதையாகக் கீழே இறங்கிய ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிவலிங்கத்திற்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். லாரியை நிறுத்த முயன்று அவர் உயிரிழந்த காட்சி அங்கிருந்தவர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!