அதிர்ச்சி வீடியோ... குப்பைகளை தண்டவாளத்தில் வீசிய ரயில்வே ஊழியர்.!

 
ரயில்வே ஊழியர்

ரயிலில் பயணம் செய்பவர்கள் குப்பைகளை தண்டவாளத்தில் கொட்டாதீர்கள் என அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கும். இதனை கடைப்பிடிக்க அறிவுறுத்தி ரயில் டிக்கெட்டுகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். இந்நிலையில் இன்று காலை மார்ச் 6ம் தேதி வியாழக்கிழமை  THE SKIN DOCTOR எனும் எக்ஸ் தள கணக்கிலிருந்து ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயில்வே ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் குப்பைகளைப் போடுவதற்கு குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தாமல் ஓடும் ரயிலிலிருந்து அதை வெளியில் வீசுவதை காணமுடிகிறார்.  


இதுகுறித்த  வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ள THE SKIN DOCTOR எனும் கணக்கு, “ஊழியரின் செயல் வீடியோவாகப் பதிவு செய்யப்படுவதை அவரே அறிந்திருந்தார். இந்த ஆணவமும் நம்பிக்கையும் ஊழியர்களுக்கு எங்கிருந்து வருகிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  

இந்நிகழ்வு, பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்சிலிருந்து மும்பைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 04115 ரயிலில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ  6 மணி நேரத்தில்  5 லட்சத்து 80 ஆயிரம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவிற்குக் கீழ் தங்களது கருத்துகளை பதிவிட்டு  வருகின்றனர். பதிவர் ஒருவர், “இது வழக்கமான நடைமுறை.. ரயில் தண்டவாளங்களை நாம் உன்னிப்பாகக் கவனித்தாலே இதை நாம் பார்க்க முடியும். தண்டவாளத்தின் இருபுறமும் 15-20 மீட்டர் வரை இதுபோன்ற தட்டுகள், ரேப்பர்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் சிதறிக்கிடக்கும். இது மிக மோசமான நிலைமை” எனத் தெரிவித்துள்ளார்.ரயில் பாதைகளை மாசுபடுத்தியதற்காகவும், குப்பைகளை அகற்றுவதற்கு முறையற்ற செயல்களில் ஈடுபட்டதற்காகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பலரும் வலியுறுத்தி  வருகின்றனர்.

மேலும் சிலர் அந்த ஊழியர் தவறுதான் செய்திருக்கிறார்; ஆனால், பயணிகள் உருவாக்கும் கழிவுகளின் அளவையும், ரயில்களில் இருக்கும் குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்   அதற்கான கட்டமைப்பை ரயில்வே நிர்வாகம் உண்டாக்கித் தரவேண்டும் எனவும் ஒரு சாரார்  தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு உதவுவதற்காகவே இருக்கும் அதிகாரப்பூர்வ கணக்கான RailwaySeva இந்த விவகாரம்  குறித்து  “இந்திய ரயில்வேயில் குப்பைகளை அகற்றுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. இதை மீறியுள்ள On Board Housekeeping Service ஊழியர் நீக்கப்பட்டு அவர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  மேலும், ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகத்தின் தூய்மையை உறுதி செய்ய ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது” என விளக்கம் அளித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web