அதிர்ச்சி வீடியோ... நோயாளிக்கு கட்டு போட்ட தூய்மை பணியாளர்... அரசு மருத்துவமனையில் அவலம்!

 
அரசு மருத்துவமனை அவலம்

தென்காசி மாவட்டம் சிவகிரியில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்கதையாகி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக திடீர் விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை உள்ளது.

இந்நிலையில் காயம் ஏற்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது; வழக்கம் போல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள தூய்மைப் பணியாளர் ஒருவர் அந்த நோயாளிக்கு கட்டுப்போட்டு சிகிச்சை அளித்துள்ளார்.

இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றகுறையால் இச்செயல் நடைபெறுவதாக  சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும் செவிலியர்கள் பற்றாக்குறையை நீக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் . 

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்!! உடனே முந்துங்க!! இன்று மிகப்பெரிய வாய்ப்பு!!

இது குறித்து மாவட்ட ஆட்சியர்  “ மருத்துவமனையில் இந்த சம்பவம் குறித்து முறையான ஆய்வு செய்த பின்னர் வீடியோவில் இருக்கும் நபர் தவறில் ஈடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ” என உறுதி அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?