அதிர்ச்சி வீடியோ.. ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது வெடிகுண்டு வீசிய இளைஞர்கள்!

 
கார் சிசிடிவி வெடிகுண்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஏப்ரல் 13ம் தேதி இரவு நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள நாரிபாரி பகுதியில், சுமார் இரவு 9 மணிக்கு  3 பயணிகளுடன் சென்ற கார் மீது அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள் வெடிகுண்டை வீசியுள்ளனர்.

சுபம், வேத் மற்றும் விக்கி ஆகிய மூவரும்  அந்த காரில் இருந்தனர்.  அவர்கள் ப்ரயாக்ராஜ் நகரில் நடக்கவிருந்த திருமண நிகழ்வுக்கு புறப்பட்டுச் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறியுள்ளனர். இச்சம்பவத்தின்போது கார் சில நிமிடங்களுக்கு நாரிபாரியில் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், அந்த தருணத்தில் பின்தொடர்ந்திருந்த மர்ம நபர்கள் குண்டை வீசி தப்பியோடி விட்டதாகவும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்த வீடியோ அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெடிபொருள் காரில் வெடித்ததையடுத்து, கண்ணாடிகள் சிதறி பயணிகள் பெரும் பதற்றத்துடன் காரிலிருந்து வெளியே தப்பி ஓடியது பதிவாகியுள்ளது.   சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு  மூவரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியுள்ளனர்.

குண்டு வெடிப்பு வெடி விபத்து வெடிகுண்டு
இத்தாக்குதல் குறித்து  ப்ரயாக்ராஜ் டிசிபி விவேக் யாதவ், ஏசிபி குஞ்சலதாவுக்கு விசாரணை உத்தரவு வழங்கியுள்ளார். இச்சம்பவம் சம்பந்தமாக சந்தேகிக்கப்படும் நபர்களை பிடிக்க விசேஷ தளவாடக் குழுவும்  சேர்க்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web