அதிர்ச்சி வீடியோ... தறிகெட்டு ஓடிய கார்... அடுத்தடுத்து 8 பைக்குகள் மீது மோதிய கொடூரம்!

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் சூர்யாபேட் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து அதிவேகமாக மோதியது.
A speeding car lost control and rammed into 8 bikes on #Suryapet Road in #Jangaon. Causing a woman suffered grievous injuries, while 2 others escaped with minor injuries. The terrifying moment was captured on #CCTV.
— Surya Reddy (@jsuryareddy) February 17, 2025
The #CarAccident raised serious #RoadSafety concerns. Suspects… pic.twitter.com/hnQ21KfymI
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 2 பேர் லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
அதன்படி முதற்கட்ட விசாரணையில் அவர் மது போதையில் இருந்ததும், இதனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!