அதிர்ச்சி வீடியோ... கயிற்றில் வானத்தில் சுற்றி சுற்றி பறக்கும் இளம்பெண்!

 
கயிற்றில் வானத்தில் சுற்றி சுற்றி பறக்கும் இளம்பெண்
தினமும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பெண் பங்கீ டிராம்போலின்  கயிறை கட்டி குதிக்கும் விளையாட்டில் கலந்துகொண்டார். அப்போது நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. பாரம்பரிய இந்திய உடையில் உள்ள அந்த பெண், பயணத்தை ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்தார். பயிற்சியாளர் கயிற்றை இழுக்க  முயற்சி செய்தார்.  ஆனால் அது சிக்கிக் கொண்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு, கயிறு விடப்பட்டது. உடனே அந்த பெண் வானத்தை தொடும் அளவிற்கு உயரத்தில் சென்றார்.

 



அந்த உயரத்துக்கு சென்றதும், வீடியோ எடுத்தவர் கூட அதற்கான காட்சியை பதிவு செய்யத் தயாராக இல்லை. அதன்பிறகான காட்சி வீடியோவில் இல்லை.  பிறகு சில விநாடிகளுக்குள் அவர் மீண்டும் கீழே இறங்கும் போது வீடியோவில் தெரிகிறார். அவர் கீழே வரும்போது, தானாகவே சில சுழற்சிகளை எடுத்ததைக் காண முடிகிறது. இந்த காட்சி பார்த்த அனைவருக்கும் உற்சாகத்தையும், அதே நேரத்தில்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதள பயனர்  ஹேம்லதா மீனா, X  தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு சில மணி நேரங்களில் 1.79 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அவருடைய பதிவு “இதை வாழ்க்கையில் மீண்டும் அவர் ஒருபோதும் செய்யமாட்டார்” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web