அதிர்ச்சி வீடியோ.. நாய்க்கு மது ஊற்றிக் கொடுத்த இளைஞர்... நண்பர்கள் அட்டூழியம்!

 
மதுபானம்

நாய்க்கு மது ஊற்றிக் கொடுத்து, குடிக்க வைத்து, நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பரவி, கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. 


உத்தரபிரதேச  மாநிலம், பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தில் வசித்து வந்த ஜிதேந்திரா எனும் இளைஞர், அந்த பகுதியில் உள்ள தெருநாய் ஒன்றிற்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்து குடிக்க செய்துள்ளார். இந்த சம்பவத்தை அவரது நண்பர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் அந்த வீடியோ விரைவில் வைரலாகி கடும் கண்டனங்களைக் குவித்து வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜிதேந்திராவை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!