அதிர்ச்சி... விளையாடிக் கொண்டிருந்த போதே.. பிரபல கிரிக்கெட் வீரர் மைதானத்தில் மாரடைப்பால் மரணம்!

 
ரத்தோட்

நேற்று பிப்ரவரி 26ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாநில சரக்கு மற்றும் சேவை வரி துறையில் மூத்த எழுத்தராக பணிபுரிந்து வந்த வசந்த் ரத்தோட் , அகமதாபாத், பதாஜில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 

இந்நிலையில், வசந்த் ரத்தோட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்தார். உடனே மைதானத்தில் இருந்த வீரர்கள் அவரை மீட்க விரைந்து சென்றனர். ஆனாலும் ரத்தோடை காப்பாற்ற முடியவில்லை. 


கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் போது ஆரம்பத்தில் ரத்தோட் அணி பீல்டிங் செய்தனர். ரத்தோட் பந்து வீசும் போது நன்றாக வீசியதாகவும், அதன் பின்னர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மைதானத்திலேயே மாரடைப்பால் கீழே விழுந்த ரத்தோட்டை, போட்டி நடைபெறும் பல் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்திருந்ததால், சோலா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.

ரத்தோட்

வஸ்த்ராபூரில் வசித்து வந்த வசந்த் ரத்தோட்டுக்கு 34 வயதாகிறது. கிரிக்கெட் வீரர் ஒருவர், விளையாட்டின் போது இப்படி  மாரடைப்பால் காலமாவது இது மூன்றாவது நிகழ்வாகும். இதற்கு முன்பாக ராஜ்கோட்டைச் சேர்ந்த பிரசாந்த் பரோலியா (27), சூரத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் சவுகான் (31) ஆகியோரும் இதே போன்று விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால், மைதானத்திலேயே மரணமடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web