கள் இறக்கும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு... 3 போலீசார் மீது வழக்குப்பதிவு!

 
தென்காசி தென்காசி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில், கள் இறக்கும் தொழிலாளி மணிகண்டன் (32) என்பவர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாகக் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், விசாரணைக்காகச் சென்ற காவலர்களுக்கும் மணிகண்டனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் போலீசாரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், தற்காப்பிற்காகப் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.

ஆம்புலன்ஸ்

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை மீட்ட போலீசார், உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தைக் கண்டித்து மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பனைத் தொழிலாளர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். "விசாரணை என்ற பெயரில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினர்.

போலீஸ்

பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய 3 காவலர்கள் மீது தற்போது அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரணத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டது தென்காசி பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!