வயசுக்கு வந்த மகள்.. ஸ்வீட் 16 விழாவில் துப்பாக்கி சூடு! 2 பேர் பலி! 6 பேர் படுகாயம்!

 
துப்பாக்கி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகள், தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. குறிப்பாக சிறுவர்களிடம் துப்பாக்கி புழக்கம் அதிகரித்து விட்டதாகவும்  மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் டக்ளஸ் கவுன்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீட்டின் உரிமையாளர் தனது மகளுக்காக ஸ்வீட் 16 என்ற பெயரிலான விருந்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். அதாவது, 16 வயது நிறைவடைந்ததும் அவர்கள் வயதுக்கு வந்தவர்கள் என அமெரிக்காவில் கணக்கில் கொள்ளப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

துப்பாக்கி

அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் திடீரென அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். பலர் வீட்டுக்கு வெளியே ஓடி தப்பி உள்ளனர். 

துப்பாக்கி

இது பற்றி வீட்டு உரிமையாளர் கூறும் போது, விருந்து நிகழ்ச்சியை இரவு 10 மணியளவில் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர், மரிஜூவானா என்ற போதை பொருளை புகைத்தபடி இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து துப்பாக்கி சூடு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 
 

From around the web