சின்னத்திரை நடிகர் மீது துப்பாக்கி சூடு.. !! பெரும் பரபரப்பு !!

 
கருப்பையா

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அகஸ்தியபுரம் பகுதியை சேர்ந்த தனபால், ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமாக நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்துள்ளார். உறவினர்களான ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோர் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர்

கருப்பையா சின்னத்திரை நடிகரும் ஆவார். இவர் வாணி,ராணி சீரியலில் நடித்துள்ளார். கருப்பையா, தனபாலின் 5 ஏக்கர்  இடத்தை சில தினங்களுக்கு முன்பு நில அளவர்களை வைத்து அளவு செய்யும் பொழுது நாலரை ஏக்கர் நிலமே இருந்து உள்ளது. அரை ஏக்கர் நிலம் இல்லாததை அறிந்த கருப்பையா, தனபால் தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபமடைந்துள்ளார்.

கருப்பையா

தொடர்ந்து அந்த அரை ஏக்கர் நிலத்திற்கு பணத்தை பெறுவதற்கு மலைப்பகுதியில் உள்ள தனபால் தோட்ட வீட்டிற்கு உறவினர்களான கருப்பையாவும்  ராஜகண்ணுவும் சென்றுள்ளனர். அங்கு மூவருக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் பொழுது தனபால் வீட்டிற்குள் சென்று துப்பாக்கி எடுத்து கருப்பையா சுட்டுள்ளளார்.

இதில் அவரது இடுப்பு மற்றும் காலில் குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சுடும்போது ராஜாகண்ணு தடுக்க முயற்சித்ததால், அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. 

கருப்பையா

காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web