நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... திருமண மேடையில் துப்பாக்கிச் சூடு… உயிருக்கு போராடும் மணப்பெண் !

 
marriage marriage

பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டம் பகுதியில் நடந்த ‘ஜெய்மாலா’ திருமண விழா திடீரென ரத்தக் களமாக மாறியது. சௌசா நகர் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற விழாவில், மணப்பெண் தனது காதலனால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தின் பல்லியா மாவட்டத்திலிருந்து திருமண ஊர்வலம் வந்திருந்தது.

சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென மேடையில் ஏறி துப்பாக்கியால் சுட்டார். ஒரு குண்டு மணப்பெண்ணின் வயிற்றில் பாய்ந்ததால் விழா இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். பக்சர் காவல் கண்காணிப்பாளர் சுபம் ஆர்யா விசாரணையை நேரில் மேற்பார்வை செய்து வருகிறார். குற்றவாளியை பிடிக்க சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!