கனடாவில் துப்பாக்கிச் சூடு வழக்கு... 3 இந்தியர்கள் கைது!

 
இந்தியர்கள்
 

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே நகரில் உள்ள கிரெசண்ட் பீச் பகுதியில் தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக கனடா காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிரான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங், தரன்வீர் சிங் மற்றும் தயாஜீத் சிங் பில்லிங் ஆகிய மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரின் வயது 19 முதல் 21 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி

இந்த வழக்கில் மூவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி வரை விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டவர்கள் என்பதால் கூடுதல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. சர்ரே நகரில் சமீப காலமாக வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!